சட்டவிரோத பணப்பரிவர்த்தனை – டெல்லி அமைச்சர் கைது

210

தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.

இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

Advertisement

சத்யேந்திர ஜெயினை ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவ்தாக தகவல் வெளியாகியுள்ளது.