சுகாதாரத்துறை அமைச்சரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

33

டெல்லி சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்  மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை கடந்த 7ந்தேதி சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், 2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்க காசுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சத்யேந்தர் ஜெயினை சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

அமலாக்க துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சத்யேந்தர் ஜெயின் இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.