நா வேற மாறி – சமந்தா பகீர்

376
Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிசியாக கவர்ச்சியாகவும் நடித்து வந்தார்.

மேலும் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தால் முடிவுக்கு வந்தது. இவர்களின் பிரிவு தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.விவாகரத்து குறித்து பல விமர்சனங்கள் உலா வந்தாலும் , அதை எதிர்கொண்டு தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில் , அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது மனநிலையை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். சமந்தா தனது ட்வீட்டில், “என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying” என்று பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.