தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை சமந்தா. திறமையான நடிகை, இயற்கை ஆர்வலர்.
2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார் சமந்தா. தற்போது ஹைதராபாதில் வசித்து வருகிறார்.
தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது S, Believe 😇என்று மட்டுமே பெயர் உள்ளது ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.