ஆடையை வைத்து ஒருவரை மதிப்பிடுவது எளிதாகிவிட்டது… நடிகை சமந்தா …

436
Advertisement

நடிகை சமந்தா, சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியிட்ட போட்டோ ஒன்று வைரலானது. அதில் அவர் போட்டிருந்த உடை பற்றி எழுந்த கமெண்டுகளுக்கு பதில் தந்துள்ளார் சமந்தா. அதில், ஒரு முடிவோடு மனிதர்களை அனுகுவதென்றால் என்ன என்பதை ஒரு பெண்ணாக நான் நன்றாக அறிவேன். .பெண்கள் அணியும் உடை, இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு அவர்களை மதிப்பீடு செய்வது தொடர்ந்து கொண்டே உள்ளது. ஒரு நபர் அணியும் ஆடைகளை அடிப்படையாக கொண்டு அவரைப் பற்றி தீர்மானிப்பது எளிய காரியமாக மாறியுள்ளது. நாம் 2022ம் ஆண்டில் இருக்கிறோம்.ஒரு நபரை நாம் அளவிடும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றிக்கொள்வோமே என்று பதிவிட்டுள்ளார்.