கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்

409

சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர் அப்துல் கலாம், பேருந்தில் இருந்து இறங்க முயன்றபோது தவறி கீழே விழுந்தார்.

மாணவர் மீது பேருந்தின் பின்புறம் சக்கரம் ஏறியதால், அவர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.