சேலம் மாவட்டத்தில் மகளிர் காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தனர்…

133
Advertisement

சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் காவல்துறை 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சூடும் பயிற்சி சேலம் நகர மலை அடிவாரம் பகுதியில் நடைபெற்றது.

இந்த பயிற்சியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் துவக்கி வைத்தனர். சேலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 150 க்கு மேற்பட்ட மகளிர் காவல் துறையினர் கலந்து கொண்டு 10 மீட்டர் 25 மீட்டர் நோக்கி சுடுதல் மற்றும் உயர் ரக துப்பாக்கிகள் பயிற்சியும் வழங்கப்பட்டது. இன்று தொடங்கிய இந்த பயிற்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது.