சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் பணி

105

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் காலை 6 மணி முதலே ஆட்சியர் அலுவலக வெளிப்புற சாலையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் தாமதமாக வந்த அதிகாரிகள் எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாததால், 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சாலையில் அமர வைக்கப்பட்டனர்.

Advertisement

மேலும் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தையுடன் பெண்கள் காத்திருந்த அவலம் அரங்கேறியது.

இதனால் அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தினர்.