சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ரோஜா என்ற பெண் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலை பட்சமாக காதிலித்து, திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சாமிதுரை மாணவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து தப்பியுள்ளார்.
தப்பியோடிய சாமிதுரையை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கூடமலை பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் சாமிதுரை பதுங்கி இருப்பதை அறிந்த மக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.