சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும், அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சாமிதுரை பெண்ணின் வீட்டிற்கு சென்று கல்லால் கடுமையாக தாக்கினார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை இளைஞர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.