நேர்காணலில் சீரிய சத்குரு

279
Advertisement

‘நதிகளை இணைப்போம்’ மற்றும் ‘மண்வளம் காப்போம்’ போன்ற சுற்றுசூழலை பாதுகாக்கும் கொள்கையை கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சத்குருவுக்கு சிக்கல்களும் சுற்றுசூழல் சம்பந்தமாக வந்த வண்ணம் உள்ளன.

அண்மையில், மண்வளம் காப்போம் என்ற முழக்கத்துடன் 100 நாட்கள் பைக் பயணத்தில் 27 நாடுகளை சுற்றி விட்டு இந்தியா திரும்பினார். பயணத்தை முடித்து வந்த சத்குருவுக்கு வட மாநிலங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், டெல்லியில் பிபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தொகுப்பாளர் சுற்றுசூழலை பாதுகாக்க விரும்பும் சத்குரு ஏன் காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் பைக் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு என்ன செய்தாலும் குறை கூறும் மக்கள் இருப்பார்கள் என மழுப்பலாக பதிலளித்தார் சத்குரு. சுற்றுசூழல் பாதுகாப்புக்கு இந்தளவு முக்கியத்துவம் அளிக்கும் போது, ஈஷா மையத்துக்கு ஏன் முறையாக அனுமதி பெறவில்லை என்ற கேள்விக்கு உடனடியாக டென்ஷன் ஆன சத்குரு, சட்டம், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்ய வேண்டாம் என்றார்.

அடுத்த கேள்வி கேட்க துவங்கு முன்னே பொறுமை இழந்த சத்குரு nonsense, பாதி மூளை இருப்பவர் சொல்வதை கேட்டு பேசுகிறீர்கள் என தொகுப்பாளரை சரமாரியாக சாடினார்.

தனது கேள்வியை தெளிவுபடுத்த தொகுப்பாளர் முயற்சித்த போது, நேர்காணல் செய்தது போதும் என்ற சத்குரு கேமெராவை ஆப் செய்யுமாறு தன் உதவியாளர்களிடம் கூறினார். கோபத்தை கட்டுப்படுத்தி சமநிலையை அடைவது பற்றி பொழுதைக்கும் வகுப்பெடுக்கும் சத்குருவால் அதை சிறிதளவு கூட பின்பற்ற முடியவில்லையே என அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.