SA எதிராக அதிக ரன்கள் விளாசிய இந்தியர்கள்

345
Advertisement

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி – 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது, அடுத்த படியாக ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது, எனவே இதுவரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளுங்கள்,

கிரிகெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா  அணிக்கு எதிராக மட்டும் 2001 ரன்களை அடித்துள்ளார், இதில் 2009 ஆம்  ஆண்டு அடித்த 200 ரன்களும் அடங்கும். 

30 போட்டிகள் விளையாடிய கோலி மொத்தமாக 1403 ரன்களை அடித்துள்ளார், இதில் 4 முறை சதம்  மற்றும் 8 முறை 50 ரன்களை அடித்தார் கோலி.

தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி 29 போட்டிகளில் 1313 ரன்களை அடித்துள்ளார், அதிகப்பச்சமாக 141 ரன்களை விலாசினார் கங்குலி .

தனது விளையாடும் நாட்களில் 36 போட்டிகளில் 1309 ரன்களை அடித்துள்ளார் டிராவிட் , ஆனால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இவர் சதம் அடிக்கவில்லை.

பிரபல முன்னால் கேப்டன்  முகமது அசாருதீன் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 1109 ரன்களை அடித்துள்ளார்.