ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்கும் நாடு

168

உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷ்ய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்க பெலாரஸ் நாடு முடிவு செய்துள்ளது.

ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.

ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது.

Advertisement

எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.