ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை வீண்… உயிர் பலி குறையவில்லை

490
Advertisement

ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் பெலாரஸ் எல்லைப் பகுதியில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர் . போரை உடனடியாக நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் பின்வாங்கவேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது பெரிய ஏமாற்றமாக உலகநாடுகள் கணிக்கின்றன .

பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை.இதுவரை உக்ரைனில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக ஐ.நா கூறுகிறது. ரஷ்ய அணு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் நேட்டோ நாடுகளும் போரில் ஈடுபடும் என்று பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடியாக அணு ஆயுத படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் .