Advertisement
  1. ஃபின்லாந்து அரசு எண்ணெய் நிறுவனமான ‘காஸும்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு கொள்முதலுக்கான தொகையை ரஷிய நாட்டு நாணயமான ரூபிளில் செலுத்தத் தவறியதால், தங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தவைக்கப் போவதாக ரஷியா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவு மிகவும் வருத்தத்துக்குரியது கூறப்பட்டுள்ளது.

ஃபின்லாந்தின் எரிசக்தி பயன்பாட்டில் 6 சதவீதம் இயற்கை எரிவாயுவாகும்.

அந்நாட்டின் அனைத்து எரிவாயு தேவையையும் ரஷியாவிடமிருந்துதான் ஃபின்லாந்து பூா்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.