அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரிக்கும் ரஷ்யா

263

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்காவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 77வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல பிரேசிலும் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவளித்துள்ளது.