மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற புதின்

394
Advertisement

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர் தொடுத்து வரும் வேளையில், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று , பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில் , லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

2 லட்சத்துக்கு மேற்பட்டோர் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரபல பாடகர் ஒலெக் காஸ்மனோவ் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
அதிபர் புதினை ‘‘உக்ரைனில் நாஜியிசத்தை எதிர்த்து புதின் போராடுகிறார்’’ என்று பலர் பாராட்டி பேசினார்கள் .