கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்

339

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும், அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும்10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.