ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலர் – திக் திக் நிமிடங்கள்

viral video
Advertisement

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ரயில்வே நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டு விட்ட நிலையில் ஒரு பெண் வேகமாக ஓடி வந்து ரயிலில் ஏறுகிறார்.

ஆனால் நிலை தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து தொங்கியபடியே சில விநாடிகள் பயணிக்கிறார்.

Advertisement

அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஓடி வந்து அந்த பெண்ணை நடைமேடைக்கு இழுத்து விட்டு காப்பாற்றுகிறார்.

ஒருவேளை அந்த காவலர் கவனிக்காமல் இருந்திருந்தால் பரிதாபமாக அந்த பெண் உயிரிழந்திருப்பார்.

ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் காட்சியை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம் “வாழ்க்கை என்பது ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல. அது விலை மதிக்க முடியாதது. பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருங்கள்” என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.