அட்வென்ச்சர் பார்க்கில் ஏற்பட்ட விபத்து 

334
Advertisement

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி கலிபோர்னியா அட்வென்ச்சர் பார்க்கில் சில தினங்களுக்கு முன் வாரஇறுதி என்பதால் மக்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிட பார்க்கில் குவிந்துள்ளனர்.வழக்கம் போல ஏற்பாடுசெய்யப்பட்ட சாக நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது.

குறிப்பிட்ட நேரத்தில் , ஸ்பைடர் மேன் உடை அணிந்தபடி மிக உயரத்தில் திரைப்படத்தில் வருவது போலவே சாகசம் ஒன்று செய்ய தயாராக இருந்தது ரோபோ ஒன்று .அதன்படி சாகசம் தொடங்கியது,திட்டமிட்டபடி பளுதூக்கும் இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள கயிறை பிடித்தபடி,வானில் பறந்து பல்ட்டி அடித்து தரையிறங்க வேண்டும்.

ரோபோவுக்கு ஏற்கனவே ப்ரோக்ராம் செய்தபடி,அதுவும் வானில் பல்ட்டி அடிக்கிறது, ஆனால் தரையிறங்கும் பொது,அருகே இங்கும் கட்டிடத்தில் மோதி கீழே விழுந்துவிடுகிறது. இதை அங்கிருந்த மக்கள் படம்பிடித்து பகிர்ந்துள்ளனர்.இணையத்தில் பலரும் இந்த விபத்துக்கு வேடிக்கையாக கமெண்ட் செய்துவருகின்றனர்.