விருதாச்சலம் சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை..!

140
Advertisement

விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஊராட்சி விரிவாக்கம் கற்பக விநாயகர் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நகர் உருவாகி 13 வருடங்களுக்கு மேலாகும். ஆனால் தற்போதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள தெரு பகுதிகளுக்கும் விவசாய விலை நிலங்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் அவர்கள் வழக்கமாக தண்ணீர் பிடிக்கும் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி விவசாய விளை நிலங்களுக்கு சென்று குடிநீர் எடுத்தாலும் தண்ணீர் பிடிக்கக் கூடாது என தனிநபர்கள் பிரச்சனை செய்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்விருத்தாசலம்- சிதம்பரம்நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டது.

மேலும் அப்போது கற்பக விநாயகர் நகர் உருவாகி 13 வருடங்கள் ஆகியும் குடிநீர் மற்றும் சாலை, தெரு மின்விளக்கு வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.