“அனைத்து முயற்சியும் வீணாயிடுச்சே” பெண் பறவையை கவர நடனம் ஆடி மூக்கோடந்த ஆண் பறவை !

261
Advertisement

மனிதர்கள் போல தான் மற்ற  உயிரினங்களும் ,அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்.இங்கு அப்படித்தான் ஆண் பறவை ஒன்று பெண் பறவையை ஈர்க்க தன் முழு திறமையை வெளிப்படுத்துகிறது.ஆண் பறவையின் செயலால் பெண் பறவை ஈர்க்கப்பட்டதா ? என்பது தான் இங்க சுவாரஸ்யமே.

வொண்டர் ஆஃப் சயின்ஸ் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த  வீடியோ ஏற்கனவே ஒரு மில்லியன் முறை பறிக்கப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட இந்த வீடியோவில்,விக்டோரியாவின் ரைஃபிள் பேர்ட் எனப்படும் ஒரு வகை பறவை இனத்தின் இளம் ஜோடி ஒன்று மரத்தின் மீது உட்காந்து இருக்கிறது.அதில் ஆண் பார்வை, அருகே இருக்கும் பெண் பறவையை ஈர்க்க முயற்சி செய்கிறது.

அதனால்,அழகாக தன் இறக்கைகளை விரித்தும்,தலையை அசைத்தும் ஒருவிதமாக நடனம் ஆடுகிறது.மனிதனை போலவே ஒரு பெண்ணை ஈர்க்க தன் திறமையை வெளிப்படுத்துகிறது.

அனால் சற்று நேரம் இதை கவனித்துக்கொண்டு உட்காந்துர்ந்த பெண் பறவை,எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல்… “விடுடா சாமி” என்பது போல அங்கிருந்து பறந்துசென்றது.அந்த ஆண் பறவையோ பார்ப்பதற்கு பாவமாக , “நம் அணைத்து முயற்சியும் வீணாகிவிட்டதே… என்பது போல சோகமாகிவிட்டது.

ரைபிள்பேர்ட் இனம் 9 முதல் 11 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் அதிகளவு காணப்படும் இந்த பறவையின் தலைகள், மார்பு மற்றும் வால் முழுவதும் நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போல  ஒளிரும் என சொல்லபடுகிறது.