20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா…

92
Advertisement

இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகை ரேகா கதாநாயகியாக நடிக்கும் ‘மிரியம்மா’ திரைப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் ‘மிரியம்மா’ திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில், ரேகாவுடன், எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரெஹைனா இசையமைக்கிறார்.இதேவேளை, திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் மாத்திரம் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடித்ததால், ‘மிரியம்மா’ படத்தின் மீதான எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.