கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.