வரலாறு காணாத அளவில் வாகனங்கள் விற்பனை

251

பண்டிகை காலத்தை ஒட்டி, நாடு முழுவதும் வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர் பண்டிகை நாட்கள் எதிரொலியாக இந்தியாவில் இந்தாண்டு வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 5 லட்சத்து 39 ஆயிரத்து 227 யூனிட்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 69 ஆயிரத்து 20 இருசக்கரவாகனங்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 521 பயணிகள் வாகனங்களும், 22 ஆயிரத்து 437 வர்த்தக வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன விற்பனை தீபாவளி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.