கிமு 45ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக ஜனவரி மாதம் முதல் நாள் புது வருடமாக கொண்டாடப்பட்டது.
அதற்கு முன், மார்ச் மாதத்தில் புது வருடம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், ஒரு ஆண்டு 355 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது. ரோம சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்த பின்னர், janus என்ற ரோம கடவுளின் பெயர் வைக்கப்பட்டுள்ள ஜனவரி மாதத்தை முதல் மாதமாக அங்கீகரித்தார்.
இரண்டு முகங்களை கொண்ட janus கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் ஒருசேர கொண்டு, புதிய தொடக்கங்களின் அடையாளமாக பார்க்கப்பட்டு வந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
எனினும், கிபி 16ஆம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பாவின் பெரும்பகுதியினர் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக எதிர்மறையான போக்கை கைக்கொண்டு வந்தனர்.
கிறிஸ்துமஸ் மட்டுமே கொண்டாடி வந்த கிறிஸ்தவர்கள், போப் கிரெகோரி ஜனவரி முதல் நாளை அதிகாரப்பூர்வ புத்தாண்டாக அறிவித்த பின்னர், புத்தாண்டு கொண்டாட்டங்களில் படிப்படியாக ஈடுபட தொடங்கினர்.
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே பாபிலோனில், அகிட்டு என்றழைக்கப்படும் 11 நாட்கள் தொடரும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனுசரிக்கப்பட்டதாக பண்டைய குறிப்புகளில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.