தன் குட்டியை பாம்பிடமிருந்து காப்பாற்ற விஸ்வரூபம் எடுத்த எலி

36
Advertisement

பாம்பு என்றாலே படையும் நடுங்கும்,மனிதனாகட்டும் விலங்குகள் ஆகட்டும் பாம்பிற்கு பயப்படுவது வழக்கமான ஒன்று.ஆனால் இது அணைத்து மனிதன் அல்லது உயிரினங்களுக்கும்  பொருந்தாது.பாம்பை எதிர்த்து சண்டையிடும் விலங்குகளும் உண்டு.

இந்நிலையில்,இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், குட்டி எலியை வாயில்  கவ்வியபடி பாம்பு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.இதை கவனித்த எலி குட்டியின் தாய் எலி தன் குட்டியை காப்பாற்ற அந்த பாம்புடன் கடுமையாக மோதுகிறது.

எதிரே இருப்பது எவ்வளவு  சக்தி  வாய்ந்ததாக  இருந்தாலும்,அதை கண்டு  அஞ்சாமல் தன் குழந்தையை மீட்க ஆக்ரோஷமாக பாம்பை தாக்குகிறது தாய் எலி. ஒரு கட்டத்தில் தாய் எலியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், எலி குட்டியை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறது பாம்பு.

Advertisement