குப்பையில் போடும் வெங்காயத் தோலின் அபூர்வ மருந்து பண்புகள்..!

105
Advertisement

வெங்காயத்தைப் பலரும் சமையலுக்காகப் பயன்படுத்துவார்கள், அதற்குக் காரணம் அதில் பல நன்மைகள் இருக்கிறது,

அதுபோல அதன் தோலைத் தேவையில்லை என்று குப்பையில் போடுவார்கள், ஆனால் வெங்காயத் தோலின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் நிச்சயம் தூக்கிப் போட மாட்டீர்கள்.

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகம்வுள்ளது, வைட்டமின் ஏ- வால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள், கண்பார்வை அதிகரிக்கும், மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும், சருமத்தைப் பராமரிக்கும் இந்த பலனைப் பெற வெங்காயத் தோல்களைக் காயவைத்து, அதில் தேநீர் தயாரித்துக் குடிக்கலாம்.

மேலும் இதில் உள்ள வைட்டமின்- சி, நோய் எதிர்ப்புச் சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது. அதுபோல வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இதனால் சளி-இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.

வெங்காய தோலில் இருக்கும் சத்துக்கள், முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைக்கும், தண்ணீரில் வெங்காய தோலை ஒரு மணி நேரத்திற்கு  ஊறவைத்து, அந்த நீரைக் கொண்டு தலையை அலசவும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

இதய நோயாளிகளுக்கு வெங்காயத் தோல்கள் வரப்பிரசாதம் என்று சொல்லலாம், வெங்காயத் தோலைக் கழுவி, தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பின் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும், இப்படி தினமும் செய்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.