கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ எருதுகட்டு விழா

288

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள சமத்துவ எருதுகட்டு விழா சுமார் 50 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட அடக்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற எருதுகட்டு போட்டியில் காளையர்கள் முரட்டுக்காளைகளை மடக்கிப் பிடித்தனர்.

எருதுகட்டு போட்டியை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.