ராஜீவ் கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் – பிரதமர் அறிவிப்பு

modi
Advertisement

விளையாட்டு துறை வீரர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இனி இந்த விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும். ஆதவாது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்படஇருக்கிறது.

Advertisement