ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

114

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து பேசினர்.

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

Advertisement