பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா.?

indian-railways
Advertisement

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தான்வே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில், பாலம் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தான்வே அடிக்கல் நாட்டினர்.

அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறினார்.

பயணிகள் ரயில் பிரிவு எப்போதும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என தெரிவித்தார்.

Advertisement

டிக்கெட் கட்டணத்தை அதிகரிப்பது பயணிகளை பாதிக்கும் என்பதால் தங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்று அமைச்சர் கூறினார்.

மேலும், சரக்கு ரயில்கள் மட்டுமே வருவாயை உருவாக்குகின்றன என குறிப்பிட்ட அவர், கொரோனா தொற்று பரவலின்போது சரக்கு ரயில்கள் பொருட்களை எடுத்து செல்வதிலும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன என்றும் கூறினார்.

மும்பை-நாக்பூர் விரைவு தடத்தில் புல்லட் ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.