சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ எந்திரங்கள் அறிமுகம்

239

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’எந்திரங்கள் நிறுவியுள்ளனர்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடமுறைகளை மேம்படுத்தும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிநவீன முறையில் பைகளை ‘ஸ்கேன்’ செய்யும் எந்திரங்களை சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் நிறுவியுள்ளனர்.

45 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த அதிநவீன ‘ஸ்கேனர்கள்’ மூலம் பொருட்களின் இருவேறு பக்கங்களை பார்வையிடும் வகையில் செயல்படும்.

மேலும் இந்த ‘ஸ்கேனர்’களின் சிறப்பு அம்சமாக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ஒரு மணி நேரத்தில் 300 முதல் 500 பைகளை சோதனை செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இது போன்ற ‘ஸ்கேனர்களை’ விரைவில் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இதர ரெயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.