நடைபயணத்தில் உற்சாக வரவேற்பு பெற்ற ராகுல் காந்தி

102

38வது நாளான இன்று கர்நாடகாவின் ஹலகுந்தியிலிருந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி  கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 38-வது மற்றும் கர்நாடகத்தில் 14-வது நாள் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். கர்நாடகா மாநிலம் ஹலகுந்தியிலிருந்து ராகுல்காந்தி 38வது நாள் பாதயாத்திரையை தொடங்கினார்.

நடைபயணத்தில் வழியெங்கிலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ராகுல்காந்தியை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை, இன்று ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கவுள்ளது. அதன்காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement