ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்

171

ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்.

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ராகுல்காந்தி  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடைபயணம் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவைத்தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.

ஆனால், சோனியாகாந்தியின் உடல் நிலையை கருத்தில்கொண்டு, பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என்று அவரை ராகுல்காந்தி அனுப்பி வைத்துவிட்டார். இதனையடுத்து, கர்நாடக மாநிலம் தும்கூர், மாயசந்திரா பகுதியில் இருந்து இன்று ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கினார். கர்நாடகாவில் 7வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, இன்று நடைபயணத்தை பனசந்திராவில் நிறைவு செய்ய உள்ளார்.