“நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும்”

  189
  rahul
  Advertisement

  கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  நாடுமுழுவதும் நீட் தேர்வு வரும் 12- ஆம்தேதி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

  இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், மாணவர்கள் விவகாரத்தில் அரசு கண்மூடித்தனமாக நடந்துகொள்ளக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

  இதனால், வரும் 12- ஆம்தேதி நீட்தேர்வை நடத்தக்கூடாது என்றும் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்த பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்றும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.