“அமித்ஷா பதவி விலக வேண்டும்”

308
rahul gandhi
Advertisement

ரஃபேல் முறைகேடு விசாரணையை தடுப்பதற்காகவே, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டு்ம் என்றும் ராகுல் வலியுறுத்தினார்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, தனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

ரஃபேல் தொடர்பான விசாரணையை திசைதிருப்புவதற்காகவே பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்பு நடைபெற்றிருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

Advertisement

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்