மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

128

உதகை அருகே உள்ள பழங்குடியினருக்கான ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியின் செயல்பாடுகள் மாணவர்களின் கல்வி மற்றும் தேவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்கள் எதிர்காலம் குறித்து பெரிய அளவில் கனவு காண வேண்டும் என்றும், தங்களது கனவு நனவாகும் வரை கடினமாக படிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். 

Advertisement