மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழாவில் ராணி எலிசபெத்?தீயாய் பரவும் புகைப்படம்!!

115
Advertisement

அண்மையில் பிரித்தானிய  மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூடு விழா கடந்த 6 ஆம் தேதி கோலாகலமாக பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது தற்பொழுது அங்கிருந்து வெளியான புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூடு விழாவினால் இங்கிலாந்தே விழா கோலம் பூண்டிருந்தது காரணம் 70வருடங்களுக்கு பிறகு பாரம்பரிய விழா அந்நாட்டில் நடைபெற்றதால் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. முடிசூட்டு விழாவிற்காக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் – கமீலா பார்கர் இருவரும் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் விழா நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே வுக்கு வந்திறங்கினர்.

பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல் ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ், மன்னருக்கான அரியணையில் அப்போது அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் ராணி கமீலா பார்கர் உட்கார்ந்தார்ன் பின்பு  மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, “சூப்பர்டூனிக்கா” எனப்படும் தங்க அங்கி அணிந்து, கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் மன்னருக்கு சூட்டப்பட்டது. மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அரச குடும்பத்தின் வீரவாள், உலக உருண்டை, மோதிரம், செங்கோள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில் தான் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் உள்ளது அந்த உருவம்.. அல்லது கருப்பு நிற அங்கியை அணிந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.. அரிவாளை போன்ற ஒன்றை கையில் சுமந்து கொண்டு செல்கிறது..முகம் முழுக்க அடையாளம் தெரியாதவாறு முகமூடி அணிந்துள்ளது.. இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னரின் முடிசூட்டு விழாவில் ராணி எலிசபெத் ஆசிர்வதிக்க வந்திருப்பாரோ என்றுகூட கற்பனையான கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.