ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரூ 15 லட்சம் கோடி சொத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
1952 ஆம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் புதின் பிறந்தார். 1975 ஆம் ஆண்டு ரஷ்ய உளவு நிறுவனமான கேஜிபியில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது ரஷ்ய அதிபராக உயர்ந்துள்ள அவரது சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில் இந்தத் தகவல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சொத்துகளை மதிப்பிடும் நிறுவனமான ஹெர்மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட், புதினுக்கு 200 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கு இது சமம்.
இந்த சொத்து மதிப்பின் அடிப்படையில் உலகின் 6வது பணக்காரர் புதின் என்று கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமாக 700 கார்கள், 58 ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும், பல விமானங்களும், ஜெட் விமானங்களும் உள்ளன. இதுதவிர, கிரெம்ளின் என்கிற சொகுசு விமானமும் உள்ளது.
இந்த அதிநவீன விமானத்தில் கழிப்பறைகள் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. இந்த விமானம் சொகுசு வசதிகள் நிறைந்தது.
இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசுப் படகும் புதினுக்கு உள்ளது.
புதினின் கைக்கடியாரங்களின் மொத்த மதிப்பு மட்டும் 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்.
பல அரண்மனைகளும் புதினுக்கு சொந்தமாக உள்ளன. கருங்கடலுக்கு அருகே 1 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பங்களா ஒன்றும் உள்ளது.