இணையத்தை கலக்கும் செல்லப்பிராணி

289
Advertisement

செல்லப்பிராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்கள் தான்.மனிதனின் உணர்வுகளை உணர்ந்து ஒரு நல்ல நண்பனாக , பாதுகாவலனாக இருக்கக்கூடியவை நாய்கள்.

சில நேரங்களில் அவை மனிதர்களை விட புத்திசாலித்தனமாக இருக்கும்.இதை நிருமிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலங்குகளை வைத்து சிலர் வயிற்று பிளப்பிற்காக பொதுவெளியில்  வித்தை செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதை நாம் பாத்துருப்போம்.இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் பொது இடத்தில ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டு இருக்கிறார்.

அவரின் செல்லப்பிராணியான குட்டி நாய் ஒன்று,அங்கு சுற்றியிருக்க கூடிய மக்களிடம் சென்று ,அவர்கள்தரும் பணத்தை வாயில் பிடித்துக்கொள்கிறது.பின் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு அதை ,தன் உரிமையாளர் ,அதாவது ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டு இருக்கும் முதலாளியிடம் கொண்டுபோய் அவரின் கையில் குடித்துவிடுகிறது.

மனிதர்கள்போலவே இந்த நாயின் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.இந்த வீடியோ  ரெடிட் வலைதளத்தில் பகிரப்பட்டு , இணையவாசிகள் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.