Thursday, January 8, 2026

26 முறை பளார்…பளார்….போதை ஆசாமியை புரட்டி எடுத்த பெண்

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் போதை ஆசாமியை கன்னத்தில் அறைந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.

குடிபோதையில் புனே மாநகர பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரை அனாவசியமாக தொட்டு சீண்டியிருக்கிறார். இதனால் பொறுமையிழந்த அந்த பெண் குடிபோதையில் இருந்த அந்த நபரை பளார்…பளார் என 26 முறை அறைந்துள்ளார்.

அடி தாங்கமுடியாமல் அந்த போதை ஆசாமி ஒரு கட்டத்தில் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related News

Latest News