அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட பச்சை பூசணி ஒன்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இது உலகிலேயே மிகப்பெரிய பூசணி என்ற பெயரை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் டாட் மற்றும் டோனா ஸ்கின்னர்.
இவர்கள் தங்களின் நிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூசணி பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களின் நிலத்தில் விளைந்த பச்சை பூசணிக்காய் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது.
இந்த பூசணியை விவசாயிகள் இருவரும் மிகப் பெரிய காய்கறி போட்டி ஒன்றிற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு அதை அளந்து பார்த்த போது பூசணி எடை 2164 பவுண்டாக இருந்தது. அதாவது 981.5 கிலோ எடை கொண்டது.
இது உலகிலேயே மிகப்பெரிய பூசணி என்ற பெயரையும் பெற்றுள்ளது. தற்போது அமெரிக்க பூசணி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.