எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும்..?

202
pondy
Advertisement

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

நகரப்பகுதிகளான முதலியார்பேட்டை, இந்திராகாந்தி சிலை, உருளையன்பேட்டை, மூலகுளம், ரெட்டியார்பளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கிராமப்பகுதிகளான வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.

Advertisement

சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.