விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு

pondy
Advertisement

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளுநர் தமிழிசையை மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் தாமஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.

அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணைய பதவிகளுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து புதுச்சேரி தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வந்த மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் தாமஸ், ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement