முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முதலமைச்சர்

123
pondy-cm
Advertisement

கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பிய 3 மாதங்களுக்கு பிறகு முதல் தவணை கொரோனா தடுப்பூசியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செலுத்திக் கொண்டார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மே மாதம் 9 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சிகிச்சை முடிந்து மே மாதம் 17 ஆம் தேதி வீடு திரும்பிய ரங்கசாமி, சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Advertisement

ரங்கசாமி இன்று டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார்.

அவர் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் இன்று டெல்லி செல்லும் வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.