அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்

1870

புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

முத்தியால்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயம், இந்த கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளிகளை அடையாளம் காணும், நவீன தொழில்நுட்ப வசதி உள்ளதாக தெரிவித்தார்.

காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனுமதி கிடைத்தவுடன் விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.