பாலை தரையில் ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

292

பால் லிட்டருக்கு 40 ரூபாய் வழங்க வலியுறுத்தி, உதகையில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள காக்கா தோப்பு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள், தங்களிடம் 28 ரூபாய்க்கு பெறப்படும் ஒரு லிட்டர் பாலை 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மருத்துவத்துக்கு அதிகம் செலவாவதால், பால் லிட்டருக்கு 40 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆவின் நிறுவனத்துக்கு இன்று அனுப்ப வேண்டிய ஆயிரம் லிட்டர் பாலை அனுப்பாமல், பால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே ஊற்றி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.