மக்கள் சாலை மறியல்

144
public
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராம சாலைகளில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.மாத்தூர் பகுதிகளில் இயங்கும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களால், கிராம சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கிராம சாலைகளின் வழியாக அதிக பாரத்தை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.