“பாஸ் பண்ணணும்னா பணம் கொடு”-மாணவர்களை மிரட்டும் பேராசிரியர் 

243
Advertisement

அனைவரின் வாழ்விலும் கட்டாயம் கிடைக்க வேண்டிய செல்வம் கல்வி,ஆனால் பல இடங்களில் கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்பதை பிரதிபலிக்கும் பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் மாணவர்களிடம் பணம் வாங்கிய விவகாரம் வைரலாகி வருகிறது.தகவலின்படி, லக்கிசராய் நயா பஜாரில் அமைந்துள்ள ஆர்-லால் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கு குறிப்பிட்ட பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு முடிந்துள்ளது.இந்நிலையில், செய்முறை தேர்வு தொடங்கியது.அப்போது மாணவர்களிடம் முறைகேடாக எழுநூறு ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் பணம் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார் அந்த பேராசிரியர்.

பணத்திற்கான ரசித்தும் தராதலால் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,அப்போது பேராசிரியர் ஒருவர் மாணவரிடம் கடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொது மாணவனை தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகார் குறித்து சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.